தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 7.10.2023 (சனிக்கிழமை) அன்று சென்னை மாவட்ட அளவில் நடத்தப்படும் 2023 -2024ஆம் ஆண்டுக்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகளில் பங்குபெற விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் எப்படி விண்ணப்பிப்பது என்கிற விவரம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
‘2023-24ஆம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கு,
உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்துவதற்கு ஏதுவாக சென்னை மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்’ என 11.04.2023 அன்று அறிவித்தார்.
அதனடிப்படையில், 2023-24ஆம் ஆண்டுக்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டிகள் சென்னை மாவட்ட அளவில் 07.10.2023 அன்று காலை 05.00 மணி அளவில் சென்னை தீவுத்திடலில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.
இப்போட்டிகள் கீழ்காணும் இரு பிரிவுகளில் நடத்தப்படவுள்ளது.
17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் 8 கி.மீ தூரமும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 கி.மீ தூரமும்,
நடைபெறும் மாவட்ட அளவில் நடத்தப்படும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5,000,
இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3,000, மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2,000,
மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.1,000 பரிசும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்படும்.
மேற்கண்ட போட்டியில் பங்கு பெற விருப்பமுள்ள வீரர், வீராங்கனைகள் அனைவரும் வயது சான்றிதழ் மற்றும் வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றுடன்,
05.10.2023 வரை சென்னை-84இல் உள்ள நேரு பூங்கா விளையாட்டு அரங்கம் மற்றும்,
பெரியமேடு ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை முன்பதிவுகள் செய்து கொள்ளலாம்.
மேலும், இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு சென்னை மாவட்ட பிரிவு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின்,
7401703480 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மாதுளை லஸ்ஸி
குறுக்கே இந்த கெளசிக் வந்தா… அப்டேட் குமாரு!
Asian Games: இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர்!
Super very well
Tamilmani s/o thagamani kanur (po) sathavattam srimusham (DK)