தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்கத் தமிழக அரசு இன்று (நவம்பர் 6) உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் “C” மற்றும் “D” பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான போனஸ் (Bonus) 8.33% மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 11.67 சதவிகிதத்துடன் 20 சதவிகிதம் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20% சதவீதம் போனஸ் வழங்கப்படும். இது தவிரத் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அரசுத் தெரிவித்துள்ளது.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், நவீன அரிசி ஆலைகள். கிடங்குகள். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29/- கோடி போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அர்ச்சகர் நியமனம்: மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
இரண்டரை வருட ஆதிக்கம்… பாபர் அசாமை வீழ்த்தி சுப்மன் கில் முதலிடம்!