சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதையும் தனிப்படை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
இந்நிலையில், தற்போது எங்கிருந்து, எவ்வளவு நகைகள் மீட்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியின் நகைக்கடன் பிரிவான ஃபெட் வங்கியில் கடந்த 13-ம்தேதி தங்க நகைகள் கொள்ளை போனது.
பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை மிரட்டி நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு தப்பிய கொள்ளையர்களை பிடிக்க 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொள்ளையில் ஈடுபட்டதாக கடந்த 14ம் தேதி வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ்(30), பாலாஜி(28) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 18 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் இன்னொரு வங்கி கிளையின் மண்டலமேலாளர் முருகன் 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும் மற்றொரு குற்றவாளியான சூர்ய பிரகாஷ் 16ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 13.7 கிலோ என மொத்தம் 31.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே நேற்று சென்னை அரும்பாக்கம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மீட்கப்பட்ட நகைகளின் விவரம்!
இந்நிலையில் தற்போது கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கிருந்து, எவ்வளவு மீட்கப்பட்டது என்ற தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
- குற்றவாளி சந்தோஷிடம் இருந்து 15ம் தேதி 15.951 கிலோ தங்க நகைகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டது.
- குற்றவாளி சூர்ய பிரகாஷிடம் இருந்து 8.8 கிலோ தங்க நகைகள் ஜெய்நகர் பூங்காவில் இருந்து மீட்கப்பட்டது.
- அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜிடம் இருந்து 6.24 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது.
- முக்கிய குற்றவாளி முருகனிடம் இருந்து 0.373 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- பாலாஜியிடம் இருந்து யமாஹா வாகனத்தில் 0.063 கிராம் தங்க கை சங்கிலி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கோவை தங்க நகை வியாபாரி ஸ்ரீவத்சாவிடம் இருந்து 0.063 கிராம் தங்க நகைகள் மீட்பு
- செந்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் காரிலிருந்து 0.080 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
என மொத்தம் 7 இடங்களில் மொத்தம் 31. 700 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை வங்கிக் கொள்ளை: மொத்த தங்க நகையும் மீட்பு!