நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம், வலி ஏற்பட்டதால் நேற்று (செப்டம்பர் 1) சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரகத்தில் இருந்து செல்லும் நரம்பில் ஏற்பட்டுள்ள சதை வளர்ச்சி அல்லது அடைப்பை சரி செய்யும் வகையில், ஸ்டன்ட் வைக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று (அக்டோபர் 1) செய்தியாளர்களிடம் கூறுகையில், “சிகிச்சைக்காக வெறும் வயிற்றில் வர வேண்டும் என்பதால் இரவே மருத்துவமனைக்கு வருமாறு மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
செலிபிரிட்டி என்பதால் நேற்று இரவே அவர் எப்படி இருக்கிறார் என்று தொடர்பு கொண்டு கேட்டோம். இன்று காலையும், அதன் பிறகு ஒருமுறையும் தொடர்புகொண்டு கேட்டோம். ரஜினி நலமுடன் இருக்கிறார். அவருக்கு எதுவும் இல்லை.
திட்டமிட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினி நலம் பெற வேண்டும் என ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் என அரசியல் திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு : காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
காந்தி மண்டபத்தில் மதுபாட்டில் : ஆளுநர் ரவி வருத்தம்!