தேசிய வீட்டு வசதி வங்கி தரவுகளின் படி ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் உள்ள 43 நகரங்களில் வீடுகளின் விலை உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு காலாண்டிலும் குறிப்பிட்ட 50 நகரங்களில் வீடுகளின் விலைகளில் ஏற்படும் மாற்றத்தை கண்காணித்து வீட்டு விலை குறியீட்டு எண் தயாரிக்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டான ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான வீடுகள் விலை அடிப்படையில் வீட்டு விலை குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டுள்ளது. அதை தேசிய வீட்டு வசதி வங்கி வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள 50 நகரங்களில், 43 நகரங்களில் வீடுகள் விலை அதிகரித்துள்ளது. 7 நகரங்களில் வீடுகள் விலை குறைந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அகமதாபாத்தில் அதிகபட்சமாக 9.1 சதவிகிதம், பெங்களூரு – 8.9 சதவிகிதம், சென்னை – 1.1 சதவிகிதம்,
டெல்லி – 0.8 சதவிகிதம், ஹைதராபாத் 6.9 சதவிகிதம், கொல்கத்தா – 7.8 சதவிகிதம், மும்பை – 6.1 சதவிகிதம் வீடுகள் விலை உயர்ந்துள்ளது.
வீட்டுக்கடன் அளித்த வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் அளித்த தகவலின்படி 50 நகரங்களிலும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சொத்து மதிப்பு 4.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இது 7 சதவிகிதம் இருந்தது. இந்த ஐம்பது நகரங்களிலும் கட்டுமானத்தில் உள்ள வீடுகளின் விலை 12.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கொரோனா காலகட்டத்தை விட வீட்டுக்கடன் விகிதங்கள் குறைவாகவே உள்ளது. ஜனவரி முதல் மார்ச் காலாண்டை ஒப்பிடும்போது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில் 0.7 சதவிகிதம் வீட்டு விலை அதிகரித்துள்ளது.
ஜூன் 2021-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு காலாண்டிலும் வீடுகளில் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வீடுகளின் தேவை அதிகரித்துள்ளது.
கட்டுமான மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கட்டி விற்கும் வீடுகளின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது.
செல்வம்
நள்ளிரவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை: நெல்லையில் பயங்கரம்!
நெட் இல்லாமல் யுபிஐ-யில் பணம் அனுப்புவது எப்படி?