ஊட்டியில் தொடரும் தோட்டக்கலைத் துறையினரின் போராட்டம்!

தமிழகம்

கோடைக்காலத்தை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகரித்துவரும் நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றி வரும் பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்.

பண்ணை பணியாளர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பு நிதி, பணிக்கொடை வழங்க வேண்டும்.

தோட்டக்கலைத்துறையில் தினக்கூலியாக ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பூங்கா பண்ணை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தோட்டக்கலைத்துறையில் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பண்ணை மற்றும் பூங்கா பணியாளர்களுக்கு தினசரி ரூ.400 ஆக உள்ள ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்த வேண்டும்.

என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தோட்டக்கலை துறை ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கொட்டும் மழைக்கு மத்தியிலும் குடைகளை பிடித்தவாறு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் மாவட்டத்தில் உள்ள எட்டு பூங்காக்களிலும், செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், குப்பைகளை அகற்றுதல் உள்பட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மலர் கண்காட்சிக்காக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள அரிய வகை செடிகள் வாடும் நிலையில் உள்ளது.

மேலும் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் இருந்த குப்பைகளை காலையில் நடைபயிற்சி வந்தவர்களே அகற்றியதாக தெரிகிறது.

பூங்கா பணிகள் பாதிப்பு குறித்து பேசியுள்ள பூங்கா நிர்வாகத்தினர்,

“ஊழியர்கள் போராட்டத்தில் காரணமாக தோட்டப் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதால் விரைவில் தீர்வு கிடைக்கலாம்.

ஆனாலும் டிக்கெட் வசூல் உள்ளிட்ட பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காக தேவையான பணியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணாவிட்டால் செடிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது” என்றனர்.

இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழ் நாடு அரசு தோட்டக்கலைத் துறை பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள் கூட்டமைப்பு, ஏ. ஐ. டி. யு. சி, தொ. மு. ச உள்ளிட்ட சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ராஜ்

ராகுல்காந்தி பிரதமர் ஆவதை பாஜகவால் தடுக்க முடியாது : ஜோதிமணி எம். பி

உதவி இயக்குநர்களுக்கு நிலம் தந்த வெற்றிமாறன்

ராகுல் பதவியைப் பறித்த தீர்ப்பு : யார் இந்த நீதிபதி ஹரிஷ் வர்மா ?

ஜெய் நடிப்பில் ‘தீராக் காதல்’

Horticulture workers' strike continues
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0