Horrible accident on Thoppur Bridge

தொப்பூர் பாலத்தில் கோர விபத்து: தொடரும் கொடூரங்கள்!

தமிழகம்

தொப்பூர் கணவாய் பகுதியில் நடந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ள நிலையில்,  இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Horrible accident on Thoppur Bridge

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படும் பகுதியாக உள்ளது.

இந்த நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலத்தில் இன்று (ஜனவரி 24) மாலை ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரிகளுக்கிடையே இரண்டு கார்கள் சிக்கி நசுங்கி தீப்பிடித்து எரிந்த நிலையில், லாரி ஒன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்தில் சிக்கிய காரில் இருந்து மூன்று பேர் உட்பட மொத்தம் 4 பேர் சம்பவ இடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதி ஒரு வழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளில் 950க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதுகாப்பு நடைமுறைகள் எதுவுகள் மேற்கொள்ளாதது குறித்து வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அறிந்த தருமபுரி எம்.பி. செந்தில்குமார், விபத்து நடந்த சிசிடிவி வீடியோவை வெளியிட்டு, ’தொடர்ந்து இதுபோன்று நடக்கும் விபத்தின் காரணமாக தான் தருமபுரி தோப்பூர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம்” என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டேக் செய்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆம்னி பேருந்து நிலையத்தில் நுழைய தடை : பயணிகள் அவதி!

‘இந்தியா’ கூட்டணி போல இல்லறம்’: அப்டேட் குமாரு

Horrible accident on Thoppur Bridge

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *