சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரி பகுதியில் ஈச்சர் லாரி ஒன்று பழுதாகி சாலை அருகே நின்று கொண்டிருந்தது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 4) காலை சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற கார் இந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
அதிவேகமாக சென்றதில் லாரியின் பின்புறம் கார் பாய்ந்து சொருகி நின்றது. இதனால் காரின் மேல்பாகம் முற்றிலும் சிதைந்தது.
இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த கேளம்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர் காவல் துறையினரும் மீட்புப் படையினரும் நான்கு பேரின் உடல்களை நீண்ட நேரம் போராடி மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கேளம்பாக்கம் போலீசார், உயிரிழந்தவர்கள் யார் யார்? எப்படி விபத்து நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : தெற்கு ரயில்வேயில் பணி!
பாலியல் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை: நிறைவேறிய மசோதா!