பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் நாளை (ஜூலை 13) பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் கோடை விடுமுறை வழங்கப்படும். இந்த நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் முடிவு அறிவிப்பு மற்றும் அதிகபட்ச வெப்பநிலை காரணமாக ஜுன் 10ம் தேதி தான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.
அதிகமாக வழங்கப்பட்ட விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் நடப்பு கல்வியாண்டில் 20 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைகள் அனைத்தும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, இம்மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான நாளை (ஜூலை 13) தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை – இரவில் இடி மின்னலுடன் மழை : மற்ற மாவட்டங்களில்?
அரசியலமைப்பு படுகொலை தினம் : மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!