ரேஷன் பொருட்கள் கடத்தல்,பதுக்கல் தொடர்பாக தகவல் தெரிவிக்க இலவச டோல் ப்ரீ எண்ணை சிவில் சப்ளை சிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்களை உடனுக்குடன் நேரடியாக தெரிவிப்பதெற்கென குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு இலவச தொலைபேசி எண் 1800 5995950 தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார்களை 24 மணி நேரமும் நேரடியாக சென்னையில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.
இந்த எண் கூடுதல் காவல் துறை இயக்குநர், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அவர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்குகிறது.
இந்த எண்ணில் புகார் தெரிவிக்கும் நபர்கள் குறித்த விவரங்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும்.
எனவே, பொது மக்கள் எவ்வித அச்சமின்றி பொது விநியோகத் திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்குவதில் நடக்கும் அனைத்து முறைகேடுகள் பற்றிய தகவல்களை அளிக்க இலவச தொலைபேசி எண்ணான 1800 5995950 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கலை.ரா
மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
ஏடிஎம் கொள்ளை : பதுங்கிய கொள்ளைக்கும்பல் தலைவன்… தட்டித் தூக்கிய தமிழக போலீசார்!