தமிழ்நாட்டில் ஹெச்எம்பிவி வைரஸ் எங்கெங்கே? சுகாதாரத் துறை சொல்வதை கவனிங்க!

Published On:

| By Kavi

சீனாவில் இருந்து பரவ தொடங்கியுள்ள ஹெச்எம்பிவி வைரஸ் தமிழ்நாட்டிலும் இரண்டு குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கொரோனோ பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பொருளாதார நிலையில் இருந்து இன்னும் பல்வேறு நாடுகளும் மீளவில்லை.
இந்த நிலையில் மற்றொரு தொற்று பாதிப்பு பரவி வருகிறது.

ஹியூமன் மெட்டாநியூமோ என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் குழந்தைகளை அதிகம் தாக்கக்கூடிய தொற்றாக உள்ளது.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு நேற்று புதிய தொற்று உறுதி செய்யப்பட்டது.

பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் கடைசி வாரத்தில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாத பெண் குழந்தைக்கும், கடந்த 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட 8 வயது ஆண் குழந்தைக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதுபோன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாத குழந்தைக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இக்குழந்தை கடந்த 24ஆம் தேதி சளி காய்ச்சல், இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஹெச்எம்பிவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் இந்த பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹெச்எம்பிவி வைரஸ் புதிய தொற்று அல்ல. 2001 ஆம் ஆண்டு இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் இந்த தொற்று பாதிப்பை சரி செய்து விடலாம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இந்த வைரஸ் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை ஆலோசனை நடத்தியுள்ளது. பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல், மூக்கடைப்பு, தொண்டை வலி ஆகியவை இந்தத் தொற்றின் அறிகுறி என மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது.

மத்திய சுகாதாரத் தறை அமைச்சர் ஜே பி நட்டா செய்தியாளர்களிடம் கூறுகையில், ” உலகம் முழுவதும் பல வருடங்களாக இந்த வைரஸ் பரவி வருகிறது.
இந்தத் தொற்று தும்மல் இருமல் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. அனைத்து வயதினரையும் பாதிக்கும். குளிர்காலத்தில் தான் அதிகம் பரவும். சீனாவில் தற்போது பரவி வரும் வைரஸ் பாதிப்பு சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : ஆவின் நிறுவனத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share