தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 24) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரிக் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஹமீன் உசேது, அவரின் தந்தை மன்சூர், சகோதரர் ரஹ்மான், நண்பர்கள் முகமது அலி உமாரி, காதர் நவாப் ஷெரிப், முகமது மாரிஸ் ஆகிய ஆறு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர்.
ஆறு பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. இதனையடுத்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஜாம்பஜார், நீலாங்கரை, தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் ஆகிய பகுதிகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் தெரியவரும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இங்கிலீஷ் கத்துக்கோங்க… ஆனா! – செல்வராகவன் வைத்த வேண்டுகோள்!
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 100 பேர் பலி, அதிகரிக்கும் போர் பதற்றம்!