இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விச்சந்திரன் அஷ்வின் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனியார் இன்ஜீனியரிங் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது, அவர் முதலில் ஆங்கிலத்தில் பேச தொடங்கினார். பின்னர் இங்கு எத்தனை பேர் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருக்கிறீர்கள்? என்று மாணவர்களை பார்த்து கேட்டார்.
இந்த சமயத்தில் குறைவான சத்தம் எழுந்தது. பிறகு, தமிழ் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டார். அப்போது, அரங்கத்தில் அதிகமானோர் சத்தம் எழுப்பினர். அதன் பிறகு, இந்தி என கூறினார்.இந்த கேள்விக்கு அரங்கம் அமைதியாகவே இருந்தது.
இதை பார்த்து விட்டு பேசிய அஸ்வின், “ இப்போது இதை நான் சொல்லியாகனும். இந்தி நமது தேசிய மொழி அல்ல. அதுவும் ஒரு அலுவல் மொழி அவ்வளவு தான் என்றார். இதை கேட்டதும் அரங்கத்தில் எழுந்த கைதட்டல் அடங்க அதிக நேரம் பிடித்தது.
இதையடுத்து, அடுத்த நாள் மீடியாக்களில் அஸ்வினின் பேச்சு பெரியளவில் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
அஸ்வின் பேசியது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அப்படி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி கேட்டபோது அவர் மறுக்கவில்லை.
இது குறித்து மதுரையில் அண்ணாமலை கூறியதாவது “என்னுடைய நண்பர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியது சரி தான். அவர் சொன்னது போல இந்தி என்பது நம் நாட்டின் தேசிய மொழி இல்லை. அண்ணாமலையாகிய நானும் அதனைத்தான் கூறுகிறேன். இந்தி என்பது இணைப்பு மொழி. இந்தி ஒரு வசதியான, நமது கருத்துக்களை தெரிவிக்க பயன்படும் மொழி என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் டூ திமுக வேட்பாளர் : யார் இந்த வி.சி.சந்திரகுமார்?
அயலகத் தமிழர் தினம்… வேர்களைத் தேடி வந்த வெளிநாட்டுத் தமிழர்கள்! இந்த வருட கான்செப்ட் என்ன தெரியுமா!