“தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்” – இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேச்சு!

தமிழகம்

மத்திய அரசுப் பணிகளில் இந்தி தெரியாதவர்கள் இடம் பெற முடியாது என்ற நிலையை திணிக்கப் பார்க்கிறார்கள், தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள் என்று வைரமுத்து பேசினார்.

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (அக்டோபர் 26) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெறுகிறது.

இதில் 30 க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, “ஒரு வரலாற்று நெருக்கடி தமிழுக்கு நேர்ந்திருக்கிறது. இது ஒன்றும் தமிழுக்கு புதிதில்லை. இந்தி திணிக்கப்படுவதும் தமிழன் எதிர்த்துக் கொள்வதும் இது 85 ஆவது ஆண்டு.

Hindi Imposition protest in Chennai Vairamuthu speech

தமிழை அழிக்கப் பார்த்தார்கள், தமிழை அந்நிய படையெடுப்பால் அடிக்கப் பார்த்தார்கள், தமிழை மதத்தால் அழிக்கப் பார்த்தார்கள், தமிழை சாஸ்திரத்தால் அழிக்க பார்த்தார்கள், இப்போது தமிழர்களே தமிழை சட்டத்தால் அழிக்க பார்க்கிறார்கள்.

இப்போது திணிக்கப்படுகிற இந்தி மொழி வேறு வடிவம் கொண்டிருக்கிறது. ஒரு ஆட்டுக்கு பூச்சூடி விட்டு, அந்த ஆட்டுக்கு பொட்டு வைத்து அந்த ஆட்டின் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது போல அது நின்று கொண்டிருக்கிறது… கத்தி தயாராக இருக்கிறது தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்.

 1938 இல் நேர்ந்த, அல்லது தமிழ்நாட்டில் எழுந்த அந்த உணர்ச்சியை விட 1965 நேர்ந்த அல்லது எழுந்த எழுச்சியை விட 2022 இல் தமிழர்கள் கூடுதல் உணர்ச்சி பெற வேண்டும்.

மத்திய அரசின் அலுவலக மொழி இந்தி. இந்தி தெரியாதவன் மத்திய அரசின் பணிகளில் இனி இடம் பெற முடியாது என்ற ஒரு நிலைமையை மெல்ல மெல்ல திணிக்க பார்க்கிறார்கள்.

முகலாய மொழியில் சமஸ்கிருதம் கலந்து பிறந்தது தான் இந்தி. அதற்கு வரலாறு சான்று உண்டு. வடமொழிகளில் நான்கு ஐந்து மொழிகளை சொல்ல முடியும்.

மராட்டிய மொழிக்குள் இந்தி மெல்ல நுழைந்தது. இந்தி வேறு, மராட்டிய மொழி வேறு, இரண்டும் உறவாடின, இப்போது பார்த்தால் மராட்டியம் தன் முகத்தையும் கலாச்சாரத்தையும் இழந்திருக்கிறது.

அவர்களுடைய தனித்தன்மை மெல்ல மெல்ல தேய்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் ஒன்றுதான் இந்தியா முழுக்க பேசப்பட்ட மொழி. சூழ்ச்சிகளின் காரணமாக தென்னாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது, சுருக்கப்பட்டது.

இன்றைக்கு தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் மத்திய அரசு பணியில் இருக்கிறார்கள். ஆங்கிலம் அறிந்தவர்கள் தமிழை ஒரு கண்ணாகவும், ஆங்கிலத்தை மறு கண்ணாகவும் பார்க்கிறோம்.

ஐந்து கோடி தமிழர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது ஒரு செய்திதான் உங்கள் பிள்ளைகளை தமிழ் படிக்க வையுங்கள், தமிழில் பெயர் வையுங்கள், தமிழில் உரையாட விடுங்கள், தமிழில் எழுத சொல்லி கொடுங்கள்.

அண்ணாவும், கலைஞரும் இன்றைய முதல்வரும் இரு மொழிக் கொள்கையை பின்பற்றி வருகின்றனர். இரு மொழிக் கொள்கையே எங்கள் ஒரே கொள்கை” என்று இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து பேசினார்.

கலை.ரா

ஈஸ்டர் குண்டு வெடிப்பும்…கோவை கார் வெடிப்பும்…முபினின் பகீர் பின்னணி!

கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: கோவை விரைந்தது என்.ஐ.ஏ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *