டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை, மதியம் 2 மணி முதல் 8 மணி வரை என மாற்றியமைக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஜனவரி 5) பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் மதுவிற்பனை நேரத்தை குறைக்கவும், பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதை தடுக்கவும் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜனவரி 5) விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடுத்தடுத்து பல்வேறு உத்தரவுகளையும், பரிந்துரைகளையும் பிறப்பித்தனர்.
பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்கவும், மதுவை விற்பவர்களுக்கு காவல்துறையினர் உரிய உரிமம் வழங்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
ட்ரெண்டிங்கில் நம்பர் -1 ‘தமிழ்நாடு’
சிறந்த இயக்குனர் : விருதை வென்ற ராஜமெளலி