முன்ஜாமீன் நிபந்தனை : பொன்.மாணிக்கவேல் கோரிக்கை ஏற்க மறுப்பு!

Published On:

| By Kavi

முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலுவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பொன்மாணிக்கவேல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். எனவே எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நான்கு வாரங்களுக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பொன்மாணிக்கவேல் நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று (செப்டம்பர் 3) விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, செப்டம்பர் 14 முதல் 4 வாரங்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட மனுதாரருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையில் எந்த தளர்வும் வழங்க முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

சிறைகளில் சாதிய ரீதியான பாகுபாட்டுக்குத் தடை : உச்ச நீதிமன்றம்!

ஷாப்பிங் மால் திறக்க போன பிரியங்கா மோகன்… அப்படியே கவிழ்ந்த பரிதாபம்!