தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி, தமிழகத்தின் பல்வேறு ஆர்.எஸ்.எஸ். மாவட்ட நிர்வாகிகள் சார்பில் ரிட் மனுக்கள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு இன்று(செப்டம்பர் 22) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளித்தும், அதன் மீது எந்த முடிவெடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பிலோ, எந்த பாதையில் செல்கிறார்கள், ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது, காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களும் பயன்படுத்தப்படாது,
போன்றவை தொடர்பான உறுதியை அளித்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு செப்டம்பர் 28 ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை நிபந்தனைகளோடு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விரிவான உத்தரவு பிறகு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கலை.ரா
’பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா’வுக்கு தடை? அமித்ஷா ஆலோசனை!
நேற்று அடக்கம் செய்யப்பட்டவர் இன்று திரும்பி வந்தார்! எப்படி?