வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடத்த அனுமதி!

தமிழகம்

வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே உள்ள சட்ட  விதிகளின்படி தேர்தலை நடத்த அனுமதி வழங்கியிருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மிகவும் பழமையான சங்கங்களில் ஒன்று உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம். 150 ஆண்டுகள் பழமையான இந்த சங்கத்தில் சுமார் 17,000 வழக்கறிஞர்கள் உறுப்பினராக உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல் நடைபெறும். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக மோகனகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விதிகளை மீறி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனவே தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சத்தியபால் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலுக்கு தடை விதித்தது. ஐந்து ஆண்டுகளில் 200 வழக்குகளை நடத்தியவர்கள் தான் போட்டியிட தகுதியானவர்கள் என்பன உள்ளிட்ட புதிய விதிகளையும் உருவாக்கி உத்தரவிட்டது. 

இந்த நிலையில்  உத்தரவை சீராய்வு  செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் உள்ளிட்டோர்  வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கில் இன்று(அக்டோபர் 14)தீர்ப்பளித்து நீதிபதி மகாதேவன், முகமது சபீக் அமர்வு வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலுக்கு இருந்த தடையை நீக்கியது.

மேலும் ஏற்கனவே இருந்த சங்கங்களின் சட்ட விதிகள் படியே தேர்தலை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கலை.ரா

குஜராத், இமாச்சல் சட்டமன்ற தேர்தல்: அறிவிப்பு இன்று வெளியாகிறது!

2014க்கு பிறகு 2023ல் தல – தளபதி பொங்கல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *