நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் க்யூஆர் கோடை பயன்படுத்தி பக்தர்கள் ஆன்லைன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் அளவில் பிரசித்தி பெற்ற கோயில், நாமக்கல் நகரில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயில். இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
இங்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, இந்தக் கோயில் வளாகத்தில் ஆறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் இரண்டு உண்டியல்களில் ‘க்யூஆர்’ கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
இதைப் பக்தர்கள் ஸ்கேன் செய்து நேரடியாக வங்கி பரிவர்த்தனை மூலம் காணிக்கையைக் கோயிலுக்குச் செலுத்த முடியும். இதற்கான ஏற்பாட்டைக் கோயில் நிர்வாகம் மற்றும் நாமக்கல் தனியார் வங்கியினர் சேர்ந்து செய்துள்ளனர்.
இதன்மூலம், பணப்பரிவர்த்தனையை எளிமையாக்க முடியும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
க்யூஆர் கோடு மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உதவி ஆணையர் இளையராஜா,
“இதன்மூலம் பக்தர்கள் எளிதாக தங்கள் காணிக்கையைச் செலுத்த முடியும். வருங்காலத்தில் நாமக்கல் நரசிம்மசாமி கோயிலிலும் க்யூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து காணிக்கையைச் செலுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த ஹைடெக் முறை கண்டிப்பாகப் பக்தர்களிடம் வரவேற்பைப் பெறும்” என்று தெரிவித்துள்ளார்.
-ராஜ்
பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க..!