இன்று பலரும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட பொருட்களை தவிர்த்து மூலிகை நிறைந்த இயற்கை முறையிலான பொருட்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதில் குளிர்பானங்களும் அடக்கம். அந்த வகையில் இந்தக் கோடையைக் குளுமையாக்க இந்த ஹெர்பல் காக்டெய்ல் ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
எலுமிச்சை இலைகள் – ஒரு கப்
அருகம்புல் – ஒரு கப்
இளம் சிவப்பாக உள்ள மா இலை – 10
துளசி இலை – ஒரு கப்
எலுமிச்சைப் பழம் – 2
சுக்குப்பொடி – அரை டீஸ்பூன்
இஞ்சித் துருவல் – 2 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் – ஒரு கப்
எலுமிச்சை தோல் துருவல் – கால் டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை.
எப்படிச் செய்வது?
எலுமிச்சை இலைகள், அருகம்புல், மா இலைகள், துளசி இலைகள் இவற்றை நன்கு சுத்தம் செய்து, பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து, 2 கப் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பை அணைத்து, பாத்திரத்தை மூடிவைக்கவும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைக்கவும். தளதளவென கொதிக்கும்போது அடுப்பை அணைக்கவும்.
கொதிக்கவைத்த ஹெர்பல் கலவையை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். இதனுடன் வெல்லக் கரைசல் சேர்க்கவும். சுக்குப்பொடி, எலுமிச்சைச் சாறு, இஞ்சித் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எலுமிச்சை தோல் துருவல் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
இதைப் பானையில் ஊற்றிவைத்து, குளிர்ந்ததும் அருந்தினால், கூடுதல் மணம், சுவையுடன் இருக்கும். எலுமிச்சைச் தோலில் அதிக சத்துக்கள் உள்ளதால் சேர்க்கப்படுகிறது. தேவையில்லை என்பவர்கள் தவிர்க்கலாம்.
“உதயச்சந்திரன் ஐஏஎஸ் மிரட்டல்” : ஜவகர்நேசன் விலகல்!
அண்ணாமலைக்கு எதிராக இளைஞரணி: உதயநிதி சிக்னல்- வெளிப்படுத்திய ஜோயல்