வடகிழக்கு பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
நேற்று சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் 5 செ.மீ, கடலூர் மாவட்டம் குறிஞ்ச்சிப்பாடியில் 3 செ.மீ, நீலகிரி மாவட்டம் குன்னூரில் 1 செ.மீ மழை பதிவானது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 36.2° செல்சியஸும், குறைந்தபட்சமாக 19.4° செல்சியஸும் ஈரோட்டில் பதிவானது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை(அக்டோபர் 2) கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை மற்றும் மறுநாள் (அக்டோபர் 3) மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
செப்டம்பர் மாசத்துல இத்தனை லட்சம் பேர் மெட்ரோ பயணமா?
அன்புமணியை காப்பாற்ற ராமதாஸ் பாஜகவில் தஞ்சம்: ஆர்.எஸ்.பாரதி
இரண்டே நாள்… வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து இந்திய அணி அபாரம்!