கொடைக்கானல் மலை பகுதிகளை மூடிய உறைபனியால் பனிக்கடல் போல கொடைக்கானல் காட்சி அளிக்கிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வட கிழக்கு பருவமழை துவங்கியது. நவம்பர் மாத துவக்கத்தில் பரவலாக மழை பெய்தது.
டிசம்பர் மாதத்தில் மழை குறைவாக பெய்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட குறைவாகவே பெய்துள்ளது.
வடகிழக்கு பருவமழை நிறைவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இதனால் அதிகாலையில் பனி பெய்கிறது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் அதிக அளவில் பனி மூட்டம் காணப்படுகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் ஏற்படுகிறது.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் உறைபனி ஏற்படுவதால் கோகர்ஸ்வாக், தூண் பாறை உள்ளிட்ட பகுதிகள் பனிக்குவியல்கள் போல காட்சி அளிக்கின்றன.
இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ரசித்து வருகின்றனர்.
செல்வம்
டி-50 : தானே இயக்கி நடிக்கும் தனுஷ்
இன்று சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!