கனமழை காரணமாக குன்னூர் வட்டத்தில் (தாலுகா) உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் இன்று முதல் நவம்பர் 9 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால், குன்னூா்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மரங்களும் முறிந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மரம் விழுந்ததில் காரில் வந்து கொண்டிருந்த குர்ஹாகில் பகுதியைச் சேர்ந்த ஜாஹிர் என்பவரும் உயிரிழந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குன்னூரில் 10 செ.மீ என கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக, குன்னூர் வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
12 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரே மருத்துவருடன் இயங்கும் அரசு மருத்துவமனை!
வங்கிக் கடனுக்காக மகனை ரூ.9,000-க்கு விற்ற தாய்!