மீண்டும் கனமழை: தமிழக மக்களுக்கு எச்சரிக்கை!

தமிழகம்

தமிழ்நாட்டில் 14 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 7) தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இந்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும்.

பின்னர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி வலுவடைந்து நகரக்கூடும்.

heavy rain warning for tamilnadu on November 14

காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடலில் வலுபெறுவதற்கு தேவையான ஈரப்பதம், காற்றின் அழுத்தம் ஆகியவை சாதகமான சூழலில் நிலவுகிறது.

ஆகையால் இது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (well marked deep depression) மாறக்கூடும். புயலாக வலுப்பெறுவது குறித்துத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதே போல் 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்வம்

“தமிழிசை பூச்சாண்டி இங்கு எடுபடாது” – முரசொலி பதில்

கமலுக்கு பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *