இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை : எங்கெங்கு?

தமிழகம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 25), நாளை (ஆகஸ்ட் 26) இரண்டு நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாட்டால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

25.08.2022

இன்று (ஆகஸ்ட் 2)5 டெல்டா மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

heavy rain warning

26.08.2022

நாளை (ஆகஸ்ட் 26) டெல்டா மாவட்டங்கள் உட்பட 19 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்,

சென்னை

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மோனிஷா

டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *