தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 28) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (செப்டம்பர் 29) முதல் அக்டோபர் 1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. இன்று (செப்டம்பர் 28) காலை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.
இதனால் சென்னையில் இன்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்ஷியஸ் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்ஷியஸ் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…