காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தமிழகம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 5) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக – ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரக் கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இதனால் இன்று முதல் டிசம்பர் 8வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் டிசம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

heavy rain warring of fishermans

இதையடுத்து இன்று, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் நாளை (டிசம்பர் 6) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

டிசம்பர் 7ஆம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

8ஆம் தேதி கனமழை

அதுபோல் டிசம்பர் 8ஆம் தேதி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

heavy rain warring of fishermans

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

ஜி20: மோடி தலைமையில் இந்தியா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.