தமிழகத்தில் நவம்பர் 6 வரை கனமழை!

தமிழகம்

தமிழகத்துக்கு நவம்பர் 6 வரை கனமழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகக் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் நிர்வாக ரீதியிலான மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது மஞ்சள் அலர்ட்டாக குறைக்கப்பட்டுள்ளது.

வரும் 6 ஆம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக வாலாஜாபாத்,வண்டலூர்,வேளச்சேரி, பூவிருந்தவல்லி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர்,மாதவரம், அமைந்தகரை,

அயனாவரம், திருவொற்றியூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று 11 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரியா

பொன்னியின் செல்வன் வெற்றி : மணிரத்னம் செய்த ஏற்பாடு!

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளிலிருந்து நீர் திறப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *