கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (ஜனவரி 8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தென் தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகை மாவட்டத்தில் நாகை, கீழ்வேளூர் வட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பேன், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட எளிதான வழிகள்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!