சென்னையின் பல பகுதிகளில் தற்போது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 31 ) காலை சென்னையில் நல்ல மழை பெய்த நிலையில் சற்றுமுன் சென்னையின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மெரினா கடற்கரை, சேப்பாக்கம், அண்ணா சாலை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கோடம்பாக்கம், பிராட்வே ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது .
அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (நவம்பர் 1) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விஜய்க்கு வில்லனாகும் விஷால்: லோகேஷ் கனகராஜ் உறுதி !
கனமழை: திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!