அதிகாலை முதல் பெய்துவரும் கனமழை காரணமாக ஈரோட்டில் பள்ளிகளுக்கும் மற்றும் நாமக்கலில் ஒரு சில இடங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று (அக்டோபர் 22) விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடந்த 20ஆம் தேதி தெரிவித்தது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுப்பெறக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று அதிகாலை முதல் பெய்து வந்த கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
அதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதை அடுத்து, பள்ளிபாளையம் வட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : ஓரங்கட்டப்படும் சவுந்தர்யா!?
சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளில் 97 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம்!