பள்ளி விடுமுறை: குழந்தைகளுக்கு அட்வைஸ் சொன்ன வெதர்மேன்!

Published On:

| By Prakash

”குழந்தைகள் ஹாட்ரிக் விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம்” என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வடக்கு கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாகவும்,

வடகிழக்கு பருவக்காற்றின் தீவிரம் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவம்பர் 2) முதல் வருகிற 5ஆம் தேதி வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை தற்போது மஞ்சள் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை காரணமாக நேற்று (நவம்பர் 1) சில மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து மழை காரணமாக நாளையும் (நவம்பர் 3) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக் குழந்தைகளும், பெற்றோர்களும் கருதுகின்றனர்.

ஆனால், “நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான வாய்ப்பு என்பது குறைவுதான்” என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,

“நாளை பள்ளிகளுக்கு விடுமுறை வாய்ப்பு என்பது மிகவும் குறைவு. குழந்தைகள் ஹாட்ரிக் விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம். வீட்டுப்பாடத்தை முடித்து தயாராக இருங்கள்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

மழை பாதிப்பு : வீடியோ காலில் முதல்வர்!

அமைச்சர்கள் Vs எம்.எல்.ஏ.க்கள்: சபரீசன் நடத்திய விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel