Pandalur : மேற்குத்திசைக் காற்றின் வேகமாறுபாடுக் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வெள்ளநீரில் தத்தளிக்கும் மக்கள் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும் பல இடங்களில் நிலச் சரிவு, வெள்ள நீர் பாதிப்பு உள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் : 18 பேர் பலி!
சிலிண்டர் விலை குறைந்தது… எவ்வளவு தெரியுமா?