கனமழை: நாளை 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக நாளை (நவம்பர் 11) 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுவதால் அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (நவம்பர் 11) திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பிறப்பித்துள்ளார்.
கனமழையை முன்னிட்டு நாளை (நவம்பர் 11) சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதுபோல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
டி20 உலகக்கோப்பை: வெளியேறியது இந்தியா!
ஆதாரை புதுப்பிப்பது அவசியம்: மத்திய அரசு அதிரடி!