கன மழை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ஆம் தேதி துவங்கியது. இதனால் கடந்த வாரம் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்தது.
இந்தநிலையில், வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது வலுப்பெற்று புதுச்சேரி, தமிழக பகுதிகளின் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்யக்கூடும்.
கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சேலம், அரியலூர், கடலூர், ராமநாதபுரம், கள்ளகுறிச்சி, திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
செல்வம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
மோடி வருகை: தனித்தனியே வரவேற்கும் எடப்பாடி, பன்னீர்