கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
சட்டசபை தேர்தல்: 9 மணிக்குள் வாக்கு செலுத்திவிட்டு வந்தால் இலவச டிபன்!