கனமழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கும், விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவம்பர் 29) ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, தேனி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் நேற்றுமுதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, இன்று தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், விருதுநகர் மாவட்ட பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
“தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு வல்கர் படம்” : விருது குழு தலைவர்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!