டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (பிப்ரவரி 4) தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நகர்ந்து நேற்று (பிப்ரவரி 3) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியில் இருந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது.
இதன் காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மோனிஷா
திருவண்ணாமலையில் இன்று தைப்பூச பௌர்ணமி கிரிவலம்!
டாப் 10 செய்திகள்…இதை மிஸ் பண்ணாதீங்க!