கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜனவரி 9) விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இரவு முதல் பெய்த கனமழை எதிரொலியாக திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’செங்கடல்’ பெயருக்கு காரணம் சொன்ன ஜூனியர் என்.டி.ஆர்
ஆம்னிக்கு அச்சே தீன்: அப்டேட் குமாரு