நீலகிரியில் கொட்டும் மழை : மண் சரிவு, உருண்டு விழுந்த பாறைகள்!

Published On:

| By Kavi

Heavy rain in the Nilgiris

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தேனி, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி  என பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. Heavy rain in the Nilgiris

நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரியில் 23செமீ மழை பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மலை பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவு, மரம் முறிந்து விழுந்த காரணங்களால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில், குஞ்சப்பனை என்ற இடத்தில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள்  உருண்டு நடுரோட்டில் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் உடுமலைப்பேட்டை பஞ்சலிங்க அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்திலும் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது.   வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டது.

கணுவாயில் இருந்து பன்னிமடை செல்லும் சாலையில் , சங்கனூர்பள்ளம் வழியில் இருக்கும் தரைபாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து செல்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரூர் அடுத்த சுண்டக்காமுத்தூர் காலனியில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோபி அரசூர் – தட்டாம்புதூரில் நெடுஞ்சாலை துறையினர் மூலம் புதிய பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம்  நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நேற்று இரவு கொட்டிய மழையால் மாநகரம் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தாலும், “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 15 சதவிகிதம் குறைவாகப் பெய்துள்ளது, அக்டோபர் 1 முதல் இன்று வரை இயல்பாக 243.6 மி.மீ. பதிவாக வேண்டிய சூழலில், 206.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Heavy rain in the Nilgiris

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு 3 பாகங்கள்: இயக்குனரின் அப்டேட்!

பிக் பாஸ் : நிக்சன் மன்னிப்பே கேட்கல – உண்மைய முழுசா தெரிஞ்சுகிட்டேன் – வினுஷா

ICC world cup 2023: நியூசிலாந்து – இலங்கை… மழை குறுக்கிட்டால் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

Bigg Boss 7 Day 38 : அம்பலமான நிக்‌சனின் ஆபாச கமெண்ட் – ஒன்னும் செய்யாத ‘பிக் பாஸ் ஃபெமினிஸ்ட்ஸ்’!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share