வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை 19ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இதனால் அடுத்த சில தினங்களுக்குக் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 20 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்,
வட தமிழகத்தில் வரும் 21,22 ஆம் தேதிகளில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது, வட தமிழகம் ,தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் கூறியுள்ளது.
இதனால் வரும் 21ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரியா
ஸ்ரீதேவியின் முதல் வீடு: சுற்றிக் காட்டிய ஜான்வி கபூர்
ராஜீவ் கொலை: மறு சீராய்வு மனுவில் உள்ளது என்ன?