தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆகஸ்ட் 20 முதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை, 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகையால், இந்த பகுதிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21)முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா