வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடைபெறுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதன்மைச் செயலாளர் உதயசந்திரன், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள், நோய்க் கட்டுப்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று மின்சாரத்தை தடையில்லாமல் வழங்கவும், சேதங்களை உடனடியாக சீரமைப்பது தொடர்பாகவும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
கலை.ரா
72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாகக் கனமழை!
காதலன் போனும், காதலி போனும் : கவனம் பெறும் காதல் பாடல்!