புரட்டி எடுக்கும் மழை…எது வந்தாலும் சமாளிக்க தயார்: ஸ்டாலின் பேட்டி!

Published On:

| By Kavi

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில், எது வந்தாலும் சமாளிக்க தயார் நிலையில் உள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று (டிசம்பர் 13) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

குற்றாலத்தில் காட்டாறு ஆர்ப்பரிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, அங்கு இன்று காலை திறக்கப்பட்ட கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் சாலை அருகே உள்ள குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் பெய்த கனமழையால் கோம்பை, மூங்கில்காடு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதல் மழை பெய்யவில்லை என்றாலும் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4000 கன அடி நீரும், பூண்டி ஏரியில் இருந்து 16,500 கன நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தென் மாவட்டங்களில் நீடிக்கும் மழை நிலவரம், வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களோடு ஆய்வு கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். அதை மேற்பார்வையிடுவதற்காக இங்கிருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

எது வந்தாலும் அதை சமாளிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. தென்காசி பகுதிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அனுப்பியிருக்கிறோம். நெல்லைக்கு நேற்று அமைச்சர் நேரு சென்றார். இந்நிலையில் திருச்சியில் மழை பெய்ததால் அங்கு வந்த அவரை மீண்டும் நெல்லை போக சொல்லியிருக்கிறோம்.

மத்திய அரசு அறிவித்த நிவாரண நிதி போதாது. அதனால் நிதி ஒதுக்க ஊடகங்களும் எழுத வேண்டும். அது அழுத்தம் கொடுக்கும் வகையில் இருக்கும்.
நீர் தேக்கங்களில் இருந்து நீர் திறந்துவிடுவதற்காக மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வெள்ள பாதிப்பு நிவாரணமாக அறிவிக்கப்பட்ட ரூ.2000 தொகையை ஏறத்தாழ கொடுத்து முடித்துவிட்டோம்” என்றார்.

செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் 

பிரியா

“அண்ணாமலையாருக்கு அரோகரா”… பரணி தீபம் ஏற்றி பக்தர்கள் தரிசனம்!

மழை… 25 மாவட்டங்களில் விடுமுறை : மாணவர்கள் குஷி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share