தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், இன்று (அக்டோபர் 25) காலை முதல் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, கோரிப்பாளையம், சிம்மக்கல், தல்லாகுளம், தமுக்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்,
இதற்கிடையில், மதுரை கனமழையின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மதுரையில் 15 நிமிடத்தில் 4.5 செமீ மழை பெய்துள்ளதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5cm மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 8.30-மாலை 5.30 இடைப்பட்ட 9மணி நேரத்தில் 9.8cm மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
25 கோடி பஞ்சாயத்து… ஐபிஎஸ் Vs ஐஏஎஸ்
“கலைஞரால் பட்டைத் தீட்டப்பட்டவர் பொன்முடி” – புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பாராட்டு!