சென்னையில் இடி மின்னலுடன் நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.
அதன்படி பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை நேற்று இரவு ஆங்காங்கே விட்டு விட்டு லேசான மழை பெய்தது.
பின்னர் நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடி மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது. மழை நீடிப்பதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மீனம்பாக்கம், கிண்டி, தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை நீடித்து வருகிறது.
மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சென்னைவாசிகள் வீட்டை விட்டு வெளியெ வரமுடியாதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு குன்றத்தூர், மதுரவாயல், பூவிருந்தவல்லி, பொன்னேரி ,அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பிரியா
கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
காஞ்சிபுரம்: ஜவுளி பூங்காக்கள் அமைக்க மானியம்!