சென்னையின் பல பகுதிகளிலும் நேற்று (அக்டோபர் 14) இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் (அக்டோபர் 15, 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மின்னம்பலம் குழு சார்பில் சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று விசிட் அடித்தோம். வாலாஜா சாலையில், பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அங்கிருந்த ஒருவர் நம்மிடம் பேசியபோது, “அத்தியாவசிய பொருட்கள் எதுவுமே கிடைக்கல. ஒவ்வொரு வருஷமும் வாலாஜா சாலையோட இரண்டு பக்கமும் மழைநீர் தேங்குது. ஆனா இதுவரைக்கும் எந்த ஸ்டெப்பும் எடுத்த மாதிரியில்ல. பப்ளிக் தான் கஷ்டப்படுறாங்க” என்றார்.
திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசியபோது, “இன்னைக்கே பல இடங்கள்ள தண்ணி தேங்குது. நாளைக்கு இன்னும் அதிகமா தண்ணீ தேங்கும். அரசு என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு தெரியல. மழை பெய்ய ஆரம்பிச்ச உடனே எல்லோரும் பால், பிரெட், தண்ணி கேன்லாம் வாங்கி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. நேத்தே கடைக்கு போனபோது எங்களுக்கு அத்தியாவசிய பொருள் கிடைக்கல. கிடைக்குற பொருள வச்சி அட்ஜஸ்ட் பண்றோம்” என்றார்.
பின்னர் திருவல்லிக்கேணி சி.என்.கிருஷ்ணசாமி தெருவுக்கு சென்றோம். அங்கு கிட்டத்தட்ட முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியிருந்தது.
அங்குள்ள ஒருவர் நம்மிடம் பேசியபோது, “சின்னதா மழை பெஞ்சா கூட இந்த இடம் தாங்காது. உடனே மழைநீர் தேங்கிரும். இன்னும் இரண்டு நாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுத்துருக்காங்க.
நாளைக்கு இந்த இடம் எப்படி இருக்கும்னு தெரியல. இப்பவே நிறைய கடைக்குள்ள தண்ணி வந்துருச்சு. இதுபத்தி பல நேரம் நாங்களும் கோரிக்கை வச்சிட்டோம். மழை பெஞ்ச உடனே சுத்தம் பண்ணுவாங்க. ஆனா, அதுக்கப்புறம் கண்டுக்க மாட்டாங்க. கார்ப்பரேஷன் இதுக்கு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.
முழு பேட்டியைக் காண…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பூச்செடிகளுக்குள் துடிதுடித்த உயிர்: சேலம் அக்கா தம்பி கொலை – நடந்தது என்ன?
சாம்சங் போராட்டம் வாபஸ்.. நடந்தது என்ன? – அமைச்சர் வேலு பேட்டி!