தமிழக கடலோர பகுதிகளில் இன்றும் (அக்டோபர் 31) நாளையும் (நவம்பர் 1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நவம்பர் 1 ஆம் தேதி பருவமழை தீவிரம் அடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மழை சென்னை எல்லையை நெருங்கி விட்டதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (அக்டோபர் 31) அவர் வெளியிட்டுள்ள பதிவில், மழை நமது எல்லைகளை அடைந்து விட்டது, கடலோர பகுதிகளில் வரவிருக்கும் நாட்களில் மழை தீவிரமடையும்.
இன்று, நாளை கனமழை
சென்னை எல்லையில் மேக மூட்டம் சூழ்ந்துள்ளதால், பகல் மற்றும் இரவு நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு தமிழக கடற்கரையில் இருக்கும் மேகங்கள் மெதுவாக நகரும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் இன்று முதல் நாளை வரை பலத்த மழை பெய்யும். அலுவலகத்திலிற்கு செல்லும் நேரமும், திரும்பும்நேரமும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இன்றும் நாளையும் நாகை, காரைக்கால், கடலூர், விழுப்புரம் கடற்கரையிலிருந்து வட தமிழகக் கடலோரப் பகுதிகள் அதிக மழை பெய்யும் முக்கிய பகுதிகளாக இருக்கும்.
தெற்கு கேரளா (திருவனந்தபுரம், கொல்லம், பதன்மித்தா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, ஆலப்புழா) மற்றும் கன்னியாகுமரியிலும் இன்று முதல் நாளை வரை ஓரளவு மழை பெய்யும்.
வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற உள் வட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நாளை மழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 மணி நேரத்தில்
அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக எழும்பூர்,பெரம்பூர்,திருவள்ளூர்,அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி,உத்துக்கோட்டை,மாதவரம், தண்டையார்பேட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோனிஷா
குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 140ஐ தாண்டியது!
காலணிகளை பாதுகாக்க காவலர்கள் பணியமர்த்தப்பட்டனரா? மாவட்ட நிர்வாகம் பதில்!