சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (அக்டோபர் 21) அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று (அக்டோபர் 21) தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 20 ஆம் தேதி உருவாகியது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை
திருவல்லிக்கேணி, காமராஜர் சாலை, சாந்தோம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர் நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் ,
அண்ணாநகர், கோயம்பேடு, பட்டினப்பாக்கம், தாம்பரம், வண்டலூர் மற்றும் சென்னையில் பல்வேறு புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை பூவிருந்தவல்லியில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதவிர சென்னையில் பல்லாவரம், ஆலந்தூர், பெரம்பூர், சோழிங்கநல்லூர், பூவிருந்தவல்லி, எழும்பூர், குன்றத்தூர், மதுரவாயல், மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரித்துள்ளது.
கிண்டி, அம்பத்தூர், அமைந்தகரை, அயனாவரம், நெமிலி ஆகிய பகுதிகளில் மிதமான பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!