20ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை!

தமிழகம்

வரும் 20 ஆம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 16.12.2022 முதல் 18.12.2022 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

20.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். 

இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  

Heavy rain in 8 districts on the 20th

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள்: 16.12.2022  & 17.12.2022  :  சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில் காலை வரை வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள்:  18.12.2022  முதல் 20.12.2022 வரை சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   காலை வரை வீசக்கூடும்.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் : 16.12.2022 காலை  தொடங்கி  சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60  கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக  குறைந்து 16.12.2022 மாலை வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு  காற்றின் வேகம் மீண்டும் குறைந்து  17.12.2022 காலை  வரை   மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Heavy rain in 8 districts on the 20th

மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள் :  இன்று 16.12.2022  மாலை  வரை   சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60  கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக  குறைந்து  17.12.2022 காலை  வரை   மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்: இன்று 16.12.2022 மாலை  வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60  கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்,  அதன் பிறகு  காற்றின் வேகம் 17.12.2022 காலை வரை  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு  காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

கலை.ரா

கலைஞர் பேனா சின்னம்: பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

மாநில கல்வி கொள்கை குழு அறிக்கை தயார்: அன்பில் மகேஷ் தகவல்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.